Search

Menu

Keeping you Informed News and Views..

அதிகளவில் தடுப்பூசி போடப்பட்டாலும் புதிய கொவிட் அலைக்கான சாத்தியம்

தடுப்பூசி போடப்பட்டவர்களின் சதவீதம் அதிகமாக இல்லாவிட்டால், ஒரு புதிய அலையைத் தவிர்க்க முடியாது

அதிகளவில் தடுப்பூசி போடப்பட்டாலும் புதிய கொவிட் அலைக்கான சாத்தியம்

இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொற்றுநோயின் மற்றொரு அலையைத் தடுப்பதற்கு கொவிட் -19 தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு சுவிஸ் சுகாதார நிபுணர்கள் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு இருப்பதை உறுதிப்படுத்திய பொது சுகாதாரத்துக்கான ஃபெடரல் அலுவலகத்தின் Patrick Mathys, ஆனால் இதுகுறித்து உடனடியான ஒரு முடிவுக்கு வர முடியாது என்றும் குறிப்பிட்டார்.

செவ்வாயன்று 707 புதிய தொற்றுக்கள் 24 மணி நேரத்திற்குள் பதிவாகியுள்ளன, இது கடந்த செவ்வாயன்று 483 ஆக இருந்தது.

அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்வதற்கு நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பின் வீழ்ச்சியைத் தடுப்பதை நோக்காகக் கொண்டு அரசாங்கம் அதன் கொள்கையை மறுஆய்வு செய்ய ஆகஸ்ட் நடுப்பகுதியில் கூடும் வாய்ப்புள்ளது.

ஒரு நாளைக்கான புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை விரைவில் 1,000 ஐ எட்டக்கூடும் என்று நேற்று செவ்வாயன்று ஒரு ஊடக மாநாட்டில் அவர் குறிப்பிட்டார்.

தடுப்பூசி போடப்பட்டவர்களின் சதவீதம் அதிகமாக இல்லாவிட்டால், ஒரு புதிய அலையைத் தவிர்க்க முடியாது என்று உயிர்வேதியியல் நிபுணரும், அரசாங்கத்தின் கொவிட் -19 அறிவியல் பணிக்குழுவின் உறுப்பினருமான Samia Hurst எச்சரித்தார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here