Search

Menu

Keeping you Informed News and Views..

இலங்கையில் மே 31 வரை பின்பற்றவேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல் வெளியீடு

வீட்டை விட்டு வெளியேற இருவருக்கே அனுமதி

இலங்கையில் மே 31 வரை பின்பற்றவேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல் வெளியீடு

கொழும்பு: நாட்டில் கொவிட்-19 தொற்று மூன்றாம் எச்சரிக்கை நிலைக்கு மத்தியில் எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதிவரை பொது மக்கள் பின்பற்ற வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டுதல்களை ஆரம்ப சுகாதார சேவைகள் தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ளது.

வீட்டை விட்டு வெளியேற இருவருக்கே அனுமதி

  • மே 31 வரை பின்பற்ற புதிய சுகாதார வழிகாட்டல் வெளியீடு
  • 3 ஆம் நிலை கொவிட்-19 பரவல் எச்சரிக்கை                                                                                                                                                                                                                                                                                                                                                                                       

COVID-19 பரவலின் 3ஆம் நிலை ஆபத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய் மற்றும் கொவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெனாண்டோபுள்ளேவினால் குறித்த புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நீண்ட விடுமுறையை எதிர்நோக்கியுள்ள போதிலும் நாட்டை முடக்கவோ, பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கவோ இது வரை எவ்வித தீர்மானமும் இல்லை என, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய எதிர்வரும் மே 31ஆம் திகதி வரை குறித்த சுகாதார வழிகாட்டல்கள் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இவ்வழிகாட்டல்களில்

  • அத்தியாவசிய சேவைகளைத் தவிர வீட்டை விட்டு வெளியேற இரண்டு பேருக்கு மாத்திரம் அனுமதி
  • திருமண வைபவங்களில் உச்சபட்சம் 150 விருந்தினர்களுக்கு அனுமதி
  • பயணிகள் பஸ், புகையிரதங்களில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளுக்கு அனுமதி
  • கார், முச்சக்கர வண்டிகளில் உச்சபட்சம் இருவருக்கு அனுமதி
  • குறைந்தபட்ச பணிக்குழாமை ஈடுபடுத்தி அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் மேற்கொள்ளல் (மின்சாரம், நீர், கேஸ், தபால்…)
  • அரச, தனியார் அலுவலகங்களில் குறைந்தபட்டச பணிக்குழாம். நிலைமைக்கேற்ப ஏனையோர் வீட்டிலிருந்து வேலை
  • பல்அங்காடிகள், நிதி நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்டவற்றில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 50% ஆக பேணுதல்
  • மத தலங்களில் 50 பேருக்கு அனுமதி
  • உணவகங்களில் ஆசன எண்ணிக்கையில் 50% அனுமதி
  • ஹோட்டல்கள், தங்குமிட சேவைகள் 50% கொள்ளளவு
  • கட்டுமான பணிக்கு முழுமையான அனுமதி
  • மரண வீட்டில் உச்சபட்சம் ஒரு தடவையில் 25 பேருக்கு மாத்திரம் அனுமதி
  • சினிமா கொட்டகைகள், திரையரங்குகளில் 25% கொள்ளளவு
  • தங்குமிடங்களில் உரிய விதிகளை பேணி பூரண எண்ணிக்கையிலானோர் தங்கலாம். புதியவர்கள் வர அனுமதி இல்லை
  • பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுமதி இல்லை
  • எந்தவொரு விருந்துபசார நிகழ்வுகளுக்கும் (Parties) அனுமதி இல்லை
  • பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கற்கை நிலையங்கள் மூடப்பட்டிருக்கும்
  • பொதுமக்கள் ஒன்றுகூடலுக்கு அனுமதி இல்லை
  • சிறுவர் பூங்காக்கள் மூடப்பட்டிருக்கும்
  • களியாட்டங்கள், இசை நிகழ்வுகள், கடற்கரை விருந்துபசாரங்கள் மூடப்பட்டிருக்கும்
  • நீச்சல் தடாகங்கள் மூடப்பட்டிருக்கும்
  • சூதாட்ட விடுதிகள் மூடப்பட்டிருக்கும்
  • அழகு நிலையங்கள் மூடப்பட்டிருக்கும்                                                                                                                 

உள்ளிட்ட விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

SOURCE: NEWS AGENCIES

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

இலங்கையில் மே 31 வரை பின்பற்றவேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல் வெளியீடு

வீட்டை விட்டு வெளியேற இருவருக்கே அனுமதி

இலங்கையில் மே 31 வரை பின்பற்றவேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல் வெளியீடு

Search here