Search

Menu

Keeping you Informed News and Views..

ஊடக சுதந்திரம் : சுவிஸ் 10ஆம் இடத்தில் : இலங்கையின் நிலை மோசம்

பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள் உள்ளிட்ட ஊடங்களைத் தாண்டி இணைய செய்தித் தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் பகிரப்படும் தகவல்களும் ஊடகங்கள் என்ற வகைக்குள்ளேயே அடங்குகின்றன.

ஊடக சுதந்திரம் : சுவிஸ் 10ஆம் இடத்தில் : இலங்கையின் நிலை மோசம்

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை, ஊடகம் என்பன முக்கிய இடத்தில் உள்ளன.

ஒரு நாட்டில் உள்ள ஊடக சுதந்திரமும் கணிக்கப்பட்டு அங்கு ஜனநாயகம் மதிப்பிடப்படுகிறது.

அந்த வகையில் 2020ஆம் ஆண்டில் ஊடக சுதந்திரம் உட்பட்சத்தில் இருக்கும் நாடாக நோர்வே (6.72 புள்ளிகள்) பெயரிடப்பட்டுள்ளது.

அதன்பின்னர் பின்லாந்து, சுவிடன், டென்மார்க், கொஸ்டரிக்கா, நெதர்லாந்து, ஜெமெய்கா, நியூசிலாந்து, போர்த்துக்கள் ஆகியன முறையே இடம்பிடித்துள்ளன.

ஊடக சுதந்திரம் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் சுவிஸர்லாந்தில் 10ஆவது இடத்தில் (10.55 புள்ளிகள்) உள்ளது.

பட்டியலில் இந்தியா 142ஆவது இடத்திலும், ரஸ்யா 150ஆவது இடத்திலும் உள்ளன.

பட்டியலின் கறுப்புப் பட்டியலில் 177ஆவது இடத்தில் சீனா உள்ளது.

இறுதியாக 179ஆவது இடத்தில் வடகொரியாவும், 180ஆவது இடத்தில் எரித்தியாவும் உள்ளன.

எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள 2020ஆம் ஆண்டுக்கான சுட்டெண்.

உலக சுதந்திரத்திற்கான சிறப்பு நாள்

உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் ‘மனித உரிமைகள் சாசனம்’ பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் 1993 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வொரு வருடமும் மே 3 ஆம் நாள் பத்திரிகை சுதந்திரதினமாக கொண்டாடப்படுகின்றது.

ஆபிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே ‘பத்திரிகை சுதந்திர சாசனம்’ முன்வைக்கப்பட்டது.

இது 1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பினால் நடாத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26 ஆம் அமர்வில் சிபாரிசு செய்யப்பட்ட ‘உலகின் சகல பிராந்தியங்களிற்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்திற்கானதும்,

ஊடகச் சுதந்திரத்தினதும் பாதுகாப்பிற்கும் மேம்படுத்தலிற்குமான ஆணை’ என்ற தொனிப் பொருளில் பரிந்துரைக்கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக உருவானது.

ஜனநாயகத்தின் 4 பிரதான தூண்கள் என்று சொல்லப்படுபவற்றில் நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை, ஊடகங்கள் என 4ஆவது இடத்தில் ஊடகங்கள் வருகின்ற போதிலும்இ அதற்கு மேலுள்ள 3 தூண்களும் சரியாகச் செயற்படுகின்றனவா என்பதைக் கண்காணித்து, மக்களுக்கு அறிவிக்கும் முக்கியமான பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு.

ஊடகங்கள் என்று வரும்பொழுது வழக்கமான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள் போன்ற ஊடங்களைத் தாண்டி இணைய செய்தித் தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் பகிரப்படும் தகவல்களும் ஊடகங்கள் என்ற வகைக்குள்ளேயே அடங்குகின்றன.

உலகின் பல நாடுகளிலே சமூக உறுதிப்பாட்டையும் விட பத்திரிகைச் சுதந்திரம் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. பத்திரிகைகளின் பணி மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகும்.

சுதந்திரமாக கருத்துகளை வெளிப்படுத்துவதற்கும் சுதந்திரமாகப் பத்திரிகைகளை வெளியிடுவதற்கும் செய்திகளைச் சதந்திரமாகஅடைவதற்கும் உலகிற்கு வாய்க்கப் பெற்ற ஒரு உரிமையைப் பாதுகாப்பதற்காகத் தங்களது உயிர்களைத் தியாகம்; செய்தவர்களையும் நினைவு கூறும் தருணமாக இன்றைய தினம் அமைகிறது.

இந்நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் யுனெஸ்கோ ஃகிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருது வழங்கிக் கௌரவிக்கின்றனர்.

இவ்விருது கொலம்பியப் பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா என்பவரின் நினவாக வழங்கப்பட்டு வருகிறது. இவர் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17 இல் அவரது அலுவலகம் முன்பாக வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

அவரின் கொலையின் பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு வலுப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

உலக அமைதிக்காகவும், பேச்சுச் சுதந்திரத்திற்காகவும் மற்றும் பத்திரிக்கை தர்மத்தினூடாகவும் பல இன்னல்களைத் தாண்டிப் போராடிய பத்திரிகை எழுத்தாளர் ஒருவருக்கு இந்நாளில் 25,000 டொலர் பெறுமதியான பரிசு வழங்கப்படுகின்றது.

சுமார் 14 நபர்களைக் கொண்ட குழுவால் குறிப்பிட்ட இத்தெரிவு நடைபெறுகிறது.

ஊடக சுதந்திரத்தை முன்னிட்டு இலங்கை நாளிதழ்களில் வெளிவந்த கேலிச்சித்திரங்கள் சில.

படங்கள் குளோப் தமிழ்

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ஊடக சுதந்திரம் : சுவிஸ் 10ஆம் இடத்தில் : இலங்கையின் நிலை மோசம்

பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள் உள்ளிட்ட ஊடங்களைத் தாண்டி இணைய செய்தித் தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் பகிரப்படும் தகவல்களும் ஊடகங்கள் என்ற வகைக்குள்ளேயே அடங்குகின்றன.

ஊடக சுதந்திரம் : சுவிஸ் 10ஆம் இடத்தில் : இலங்கையின் நிலை மோசம்

Search here