Search

Menu

Keeping you Informed News and Views..

கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து செல்வது நம்பிக்கையை தூண்டிவிட்டுள்ளது!

சுவிட்சர்லாந்தில் நோய்த் தொற்று நிலை தற்போது ஓரளவு குறைந்துள்ளதாக - சுகாதார அலுவலகத்தின் தொற்றுக் கட்டுப்பாடு தொடர்பான தலைவர் Virginie Masserey

கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து செல்வது நம்பிக்கையை தூண்டிவிட்டுள்ளது!

பேர்ண்: நோய்த் தொற்றுக் காலத்தில் நல்ல செய்தி மிகவும் அபூர்மாகவே கிடைக்கும். நம்பிக்கை என்பது ஒரு திட்டம். தடுப்பு நடவடிக்கைகளுக்கும் அது பொருந்தும். சுவிட்சர்லாந்தில் நோய்த் தொற்று நிலை தற்போது ஓரளவு குறைந்துள்ளதாக அரச பொது சுகாதார அலுவலகத்தின் தொற்றுக் கட்டுப்பாடு தொடர்பான தலைவர் Virginie Masserey  செவ்வாய்க் கிழமை (27.04.21) நடந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

“தொற்று ஏற்பட்டவர்கள் மற்றும் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டோர் ஆகியோரின் எண்ணிக்கையில் ஓரளவு முன்னேற்றத்தை காண முடிகிறது. எனினும் அண்மைய தளர்வு நிலை தொடர்பாக இன்னும் தெரிந்து கொள்ள முடியவில்லை. அதற்கு சில காலம் செல்லலாம். கடந்த செவ்வாய்க் கிழமை சுவிட்சர்லாந்தில் 2135 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டனர். இவர்களில் 65 பேர் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டனர். 11 பேர் நோய்த் தொற்றால் உயிரிழந்தனர்” என்று அவர் தெரிவித்தார்.

எனினும் இப்போது இருப்பதை விட பிரிட்டிஷ் கொரோனா திரிபு மூன்றாவது அலையை மேலும் அதிகரிக்கலாம். எனினும் தற்போதைய வரை நாளாந்தம் 2000 நோயாளர்கள் என்பதற்கு சற்று அதிகமாக உள்ளது.

இந்த நிலைக்கு என்ன காரணம் என்று விளக்கமாக கூற முடியாதிருப்பதாக அரச பொது சுகாதார அலுவலகம் சொல்கிறது. நல்ல சுவாத்தியம் மற்றும் தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருக்கலாம். பெரும்பாலோர்  தங்களை பரிசோதித்துக் கொள்வது கூட இதற்கு காரணமாக இருக்கக்கூடும். “இது தைரியமூட்டுவதாக உள்ளது. எனினும் நிலைமை இதே போல தொடர்ந்திருக்கும் என்று நிச்சயித்து கூறமுடியாது.” ஏன்று Virginie Masserey எச்சரிக்கிறார்.

மாகாணப் பகுதிகளில் தடுப்பூசி போட்டி.

எனினும் தற்போது இந்தியாவில் மற்றொரு வகை திரிபு வேகமாக பரவுகிறது. எனவே அரச பொது சுகாதார அலுவலகம் கடந்த திங்கட்கிழமை நாட்டை தனிமைப்படுத்தல் பட்டியலில் வைத்துள்ளது. இதுவரை இந்திய திரிபுடன் ஒருவர் சுவிட்சர்லாந்தில் இனம் காணப்பட்டுள்ளார். பிரேசிலிய திரிபு இப்போதைக்கு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது.

ஒட்டு மொத்தமாக பார்க்குமிடத்து சுவிட்சர்லாந்து நேரத்துக்கு எதிராக ஓடிக் கொண்டிருக்கிறது. தடுப்பூசி வழங்கல் திட்டமிட்டபடி இடம்பெற வேண்டும். தடுப்பூசி வழங்கலை மாறு பட்ட திரிபுடனான வைரஸ் எதிர்கொள்ளக்கூடாது. எனினும் இதுவரை வழங்கப்பட்ட தடுப்பூசிகள் திரிபுகளுக்கு எதிராக நல்ல பயன் தந்திருக்கின்றன.

இதனால் மாகாண அரசுகள் மெய்யான தடுப்பூசி போட்டிகளில் ஈடுபட்டு வருகின்றன. திங்கள் முதல் Graubünden மாகாண அரசு தடுப்பூசி வழங்கி வருகிறது. Vaud மாகாண அரசு அதனைப் பின் தொடர்ந்து 18 வயதானவர்களுக்கும் இப்போது தடுப்பூசி வழங்கி வருகிறது. 18 வயதானவர்களை நெகிழ்வாக கையாளுவதை கூட்டாட்சி வரவேற்கிறது. எனினும் மூத்தவர்களுக்கே இன்னும் முன்னுரிமை வழங்கப்படுகிறது. தடுப்பூசிக்கான தேவை குறைந்தால் இளைஞர்கள் முன்னணிக்கு வரலாம் என்று ஆநளளநசநல கூறுகிறார்.

ஒருவர் முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் போது மாகாண அரசுகள் இரண்டாவது தடுப்பூசியை தயாராக வைத்திருக்க வேண்டுமென கூட்டமைப்பு அரசு இப்போது கூறுவதில்லை. தற்போது தடுப்பூசி வழங்கப்படும் வேகத்தில் அது அவசியப்படுவதாக தெரியவில்லை என்று ஆநளளநசநல கூறுகிறார். சேமிப்பை குறைத்துக்கொண்டால்; அதிகமானோருக்கு துரித கதியில் தடுப்பூசி வழங்க முடியும் என்று அவர் கூறுகிறார்.

கொவிட் 19 சான்றிதழ் கோடையில்?

இரண்டாவது தடுப்பூசி சிறிது தாமதமானால் அது பெரிய பிரச்சினை அல்ல. ஏற்கனவே நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஒரு தடுப்பூசி போதுமானது என்று மத்திய அரசு கூறுகிறது. அவ்வாறானவர்களுக்கு தொற்று குணமாகி ஆறு மாதங்களுக்குப் பின்னரே தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறது.
இதற்கிடையே சுவிட்சர்லாந்தில் 8,68,621 பேருக்கு இதுவரை முழுமையாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அது முன்னைய வாரத்துடன் ஒப்பிடப்படும் போது 10.1 சத வீதம் அதிகமானதாகும்.

இந்நிலையில் தடுப்புசி சான்றிதழ் வழங்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மே மாத நடுப்பகுதியில் அதனை வழங்கக்கூடிய வகையில் இரு தொழில்நுட்ப கமிட்டிகள் செயற்பட்டு வருவதாக தெரிய வருகிறது. ஒரு நபர் நோய்த் தொற்று அற்றவர் என்று இனம் காணும் பல்வேறு ஆவணங்களை சான்றிதழ் கொண்டிருக்கும். அவர் நோய்த் தொற்று ஏற்பட்டு குணமாணவரா? அல்லது தடுப்பூசி போடப்பட்டவரா? ஏன்ற விபரங்களும் அதில் உள்ளடங்கியிருக்கும்.

ஒருவரது அடையாள அட்டையுடன் பொருந்தும் வகையில் அவரது பெயர் மற்றும் பிறந்த நாள் போன்ற தனிப்பட்ட தரவுகளும் சான்றிதழில் இடம் பெறும். அத்துடன் அதில் QR குறியீடும் இடம் பெற்றிருக்கும்.

சுவிஸ் கொவிட் 19 சான்றிதழை வெளிநாடு செல்ல ஒரு இலவச பாஸாக பயன்படுத்துவதற்காக என்னென்ன விபரங்கள் அதில் இடம் பெற வேண்டும் என்பது பற்றி தற்போது ஆராயப்பட்டு வருகிறது. “இந்த சான்றிதழ் சர்வதேச அந்தஸ்துடன் இருக்கவேண்டும் என்பதால் நாம் இவ்விடயத்தில் உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றுடன் இணைந்து செயற்படுகிறோம்” என்று  Virginie Masserey கூறுகிறார்.

சுவிட்சர்லாந்தின் நம்பிக்கைகள் வெளிநாட்டு ஊடகங்களில் இருந்து மறைக்கப்படவில்லை.

Zurich  மற்றும் Basel ஆகிய நகரங்களுக்கு கடந்த வார இறுதியில் சென்றவர்கள் வித்தியாசத்தை உணர முடிந்தது. அங்கிருந்த உணவுச் சாலைகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்ததை காண முடிந்தது. ஆனால் சுவிட்சர்லாந்தில் நோய்த் தொற்று அபாயம் இன்னும் நீங்க வில்லை. அரச பொது சுகாதார அலுவலகம் கடந்த செவ்வாய்க் கிழமை கூறியிருந்தது போல் கொரோனா தொடர்பான விதி முறைகளை மக்கள் தொடர்ந்தும் சீராக கடைப்பிடித்தால் அது தாராளவாத சமூகத்துக்கு உண்மையிலேயே நல்ல செய்தியாகத்தான் இருக்கும்.

SOURCE: NEWS AGENCIES

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து செல்வது நம்பிக்கையை தூண்டிவிட்டுள்ளது!

சுவிட்சர்லாந்தில் நோய்த் தொற்று நிலை தற்போது ஓரளவு குறைந்துள்ளதாக - சுகாதார அலுவலகத்தின் தொற்றுக் கட்டுப்பாடு தொடர்பான தலைவர் Virginie Masserey

கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து செல்வது நம்பிக்கையை தூண்டிவிட்டுள்ளது!

Search here