Search

Menu

Keeping you Informed News and Views..

கொழும்பின் புதிய துறைமுகம் ‘சீனக் காலனி’ யாக மாறலாம்

by Kusal Perera / Colombo-based Journalist and political and economic analyst

கொழும்பின் புதிய துறைமுகம் ‘சீனக் காலனி’ யாக மாறலாம்

சீனாவிடம் இருந்து கடன் ஒன்றை பெறுவதற்காக இந்த பேரத்துக்கு இலங்கை சம்மதித்துள்ளது. சீனா ஏற்கனவே நடத்தி வரும் ஹம்பாந்தோட்டை துறைமுகமும் இந்த பேரத்தின் ஒரு பகுதியாகவே இருக்கும். கொழும்பின் புதிய துறைமுக நகரத்தை பார்வையிட இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சீன தூதரகம் அண்மையில் அழைப்பு விடுத்திருந்தது.

கொழும்பு நகரத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள தீவு ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்த துறைமுகத்தின் விசேட பொருளாதார வலயம் தொடர்பான சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமானால் இத் துறைமுகம் ஒரு ‘சீனக் காலனி’யாக மாறும் என்ற பரவலான நம்பிக்கை கொழும்பு நகரத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்த மக்கள் உள்ளிட்ட நகரத்தின் நடுத்தர வகுப்பினருக்கு ஏற்பட்டுள்ளது.

மேற்படி துறைமுக நகரத்தின் ஆணைக்குழு சட்டமூலம் துறைமுகத்தை சீனாவின் செல்வாக்கின் கீழ் கொண்டு வரும் அதே நேரம் அது இலங்கையின் பிரதேச ஒருமைப்பாட்டையும்; இறைமையையும் மீறுவதாக இருக்கும் என்று கூறும் பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவும் இந்த சட்டமூலத்தினால் கோபத்துக்குள்ளாகியிருக்கிறது. புதிய துறைமுகத்தின் பொருளாதார தாக்கத்தை சட்டமூலம் கணக்கில் எடுக்க வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Alaina B. Teplitz கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி கூறியிருந்தார்.

“அத்துடன் மேற்படி சட்டமூலம் திட்டமிடப்படாத விளைவுகளையும் கருத்திற் கொள்ளவேண்டும். அதாவது அனுமதிக்கப்பட்ட வர்த்தக சூழலென்று இது கருதப்படும் நிலையில் அங்கு அதனை தமக்கு சாதகமாக்கிக் கொள்ள விழையும் போலி நோட்டு செயற்பாடுகளில் ஈடுபடுவோர் மற்றும் ஏனைய தில்லு முல்லு பேர்வழிகளுக்கு அது புகலிடமாக மாறக்கூடும” என்று அவர் மேலும் கூறினார்.

புதிதாக கிடைத்திருக்கும் சீனக் கடன் இலங்கை அரசை சட்ட மூலத்துக்கு ஆதரவாக செயற்படத் தூண்டும் அதே வேளை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் குத்தகையை மீளாய்வு செய்யாமல் சீன அக்கறைகளின் சார்பாகவே விட்டுவிடக்கூடும் என்று சில பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஒப்பந்தம் தொடர்பாக மறு பேச்சு வார்த்தை நடத்தும் திட்டம் இலங்கைக்க இல்லை என்று சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் Palitha Kohona கடந்த மார்ச் 22 ஆம் திகதி சீனாவின் South China Morning Post  பத்திரிகைக்கு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் சீன அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு கடனாகக் கிடைக்கும்.

மேற்படி துறைமுக ஆணைக்குழு சட்டமூலம் சமர்ப்பிக்கப்படுவதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் இரண்டாவது தொகுதி கடன் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை தூதுவர் C. A. Chandraprema slammed  ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரில் உய்கர் (Uighurs) முஸ்லிம் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவு தெரிவித்து ஐ.நா. விசேட தூதுவரின் மத சுதந்திரம் தொடர்பான அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

Uighurs நிலை தொடர்பாக எவராவது ஒருவர் குறிப்பிட்டளவு அக்கறை காட்டவில்லை என்று நான் நினைக்கிறேன். இலங்கையைப் பொறுத்தவரை சில நாடுகள் எந்த விடயமும் இல்லாத நிலையில் சில விடயங்களை எழுப்ப முயல்கின்றன. குழப்பம் இல்லாத நிலையில் குழப்பம் ஏற்படுத்த முயல்கின்றன.” என்று Kohana மேலும் கூறினார்

எவ்வாறெனினும் கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் சர்வாதிகார நிலைப்பாடு இரு நாடுகளினதும் ஒன்றுக்கு பதில் மற்றொன்று என்ற யோசனையை வலுப்படுத்துவதாக உள்ளது.

மேற்படி சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்ததையடுத்து தலைநகரின் புதிய துறைமுகத்துக்கு விஜயம் செய்யுமாறு சீன ராஜதந்திரிகள் உள்ளுர் எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

புதிய துறைமுகம் இலங்கைக்கு சொந்தமாக இருக்கும் போது இலங்கை எம்.பி.க்களை ஏன் சீன தூதரகம் அங்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று எதிர்க் கட்சி எம்.பி ர்யசளாயயெ சுயதயமயசரயெ கேள்வி எழுப்பினார்.

இவ் விடயத்தில் குற்றம் காண்பதற்கு எதுவுமில்லை. என்று சீன தூதரகம் பதில் கூறியுள்ளது. இதற்கு முன்னரும் நோய்த்தொற்று இருந்த காலத்தில் இது போன்ற விஜயங்கள் புதிய துறைமுகத்துக்கு மேற்கொள்ளப்பட்டிருந்ததாக சீன தூரகம் வலியுறுத்திக் கூறியது.

SOURCE: ASIANEWS.NET

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

கொழும்பின் புதிய துறைமுகம் ‘சீனக் காலனி’ யாக மாறலாம்

by Kusal Perera / Colombo-based Journalist and political and economic analyst

கொழும்பின் புதிய துறைமுகம் ‘சீனக் காலனி’ யாக மாறலாம்

Search here