Search

Menu

Keeping you Informed News and Views..

சீன வெளியுறவு அமைச்சரும் இலங்கை பயணம் : கழுகுப் பார்வையில் இந்தியா

சீன பாதுகாப்பு அமைச்சர், சீன வெளியுறவு அமைச்சர் ஆகியோரின் மிகக் குறுகிய கால இடைவெளியிலான இலங்கைப் பயணம், இலங்கை மீதான இந்தியாவின் பார்வையை மேலும் தீவிரமடையச் செய்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சரும் இலங்கை பயணம் : கழுகுப் பார்வையில் இந்தியா

சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் இலங்கைக்கு பயணித்திருந்த நிலையில், சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி அடுத்த மாதம் இலங்கைப் பயணிக்கத் தயாராகி வருகிறார்.

சீன பாதுகாப்பு அமைச்சர் கடந்த வாரம் இலங்கைக்குப் பயணம் செய்து, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோடன் பேச்சு நடத்தியிருந்தார். அத்தோடு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டிருந்தன.

சீன பாதுகாப்பு அமைச்சரின் ஒரு மாத இடைவெளியில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் தன்னுடைய பிராந்திய பயணத்தின் ஒரு பகுதியாக இலங்கை பயணிக்கிறார்.

இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் கடந்த வாரம் நடந்த மெய்நிகர் (சந்திப்பொன்றில்) சீன வௌியுறவு அமைச்சர் உரையாற்றியிருந்தார்.

கொரோனா நெருக்கடியை சமாளிப்பது, வறுமை ஒழிப்பிற்கு ஒத்துழைப்பு ஆகியவை குறித்து அவர் உரையாற்றியிருந்தார்.

இலங்கையில் கிராம அபிவிருத்தியிலும் சீனா

இலங்கையில் கிராமப்புற பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் சீனா நேரடியாக ஈடுபட்டுள்ளது. தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாதங்களில் இரண்டு வார இறுதி நாட்களில் பின்தங்கிய கிராமப் புறங்களுக்கு நேரடியாக சென்று அங்குள்ள பிரச்சினைகளை மக்களிடம் கேட்டறிந்து வருகிறார்.

அத்துடன், அந்தக் கிராமங்களுக்கான அடிப்படைத் தேவைகளையும் செய்து தருவதாக உறுதியளித்து திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த செயல்திட்டத்திற்கு சீனா நேரடியாக பங்களிப்புச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மீதான இந்தியப் பார்வையில் தீவிரம்

சீன பாதுகாப்பு அமைச்சர், சீன வெளியுறவு அமைச்சர் ஆகியோரின் மிகக் குறுகிய கால இடைவெளியிலான இலங்கைப் பயணம், இலங்கை மீதான இந்தியாவின் பார்வை மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவின் அரசியல் தீர்வான 13ஆவது திருத்தத்தைக் கூட இலங்கை இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தாத நிலையில், அனைத்து வகையிலும் இந்தியாவின் இராஜதந்திர செயற்பாடுகள் இந்த அரசாங்கத்தில் வலுவழிந்து வருவதாக கருதப்படுகிறது.

இலங்கையில் ஆட்சியில் உள்ள ராஜபக்ச அரசாங்கத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் பிடி தளர்ந்து வருவதையும் காண முடிகிறது.

இந்த நிலைமை, எதிர்காலத்தில் இலங்கையை சீனாவின் காலணியாக மாற்றிவிடக் கூடும் என்று இலங்கை அரசியல் விமர்சகர்கள் கருதி வருகின்றனர்.

சீன வெளியுறவு அமைச்சரின் இலங்கையின் பயணத்திற்கு முன்னதாக சீனாவின் பாரிய வேலைத் திட்டமான கொழும்பு துறைமுக நகருக்கான விசேட ஆணைக்குழு நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

சீன வெளியுறவு அமைச்சரும் இலங்கை பயணம் : கழுகுப் பார்வையில் இந்தியா

சீன பாதுகாப்பு அமைச்சர், சீன வெளியுறவு அமைச்சர் ஆகியோரின் மிகக் குறுகிய கால இடைவெளியிலான இலங்கைப் பயணம், இலங்கை மீதான இந்தியாவின் பார்வையை மேலும் தீவிரமடையச் செய்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சரும் இலங்கை பயணம் : கழுகுப் பார்வையில் இந்தியா

Search here