Search

Menu

Keeping you Informed News and Views..

சுவிட்சர்லாந்தில் மூன்றாவது கொவிட் 19 அலை ஏன் முன்னைய கொவிட்19 அலைகளைப் போல் மோசமாக இருக்கவில்லை?

“எங்கள் நாட்டில் இப்போது சுகாதார நிலை ஓரளவு ஸ்திரமாக உள்ளது” “நம்பிக்கைக்கு நல்ல காரணங்கள் உள்ளன” என்று சுவிஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் மூன்றாவது கொவிட் 19 அலை ஏன் முன்னைய கொவிட்19 அலைகளைப் போல் மோசமாக இருக்கவில்லை?

சுவிட்சர்லாற்தில் முதல் இரண்டு கொரோனா வைரஸ் அலைகள் 2020 வசந்த காலத்திலும் இலையுதிர் காலத்திலும் இடம்பெற்றன. அவை வீட்டுக்குள்ளேயே முடக்கம், பணி நிறுத்தம் மற்றும் அதிகரித்து வந்த தொற்றுக்கிடையே விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள், வைத்தியசாலைகளுக்கு செல்லுதல், மரணங்கள் ஆகியவற்றுக்கிடையே கழிந்தன. ஆனால் தற்போதைய மூன்றாவது அலை அவ்வாறு துடிப்புள்ளதாக இருக்கவில்லை. அது ஏன்?

சுவிட்சர்லாந்து கடந்த மார்ச் மாதத்தின் ஆரம்பம் முதல் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையை அனுபவித்து வருகிறது. பெப்ரவரி மாதத்தின் பிற் பாதியில் கிரமமாக குறைந்து வந்த வைரஸ் தொற்று மார்ச் மாத ஆரம்பத்தில் கிட்டத்தட்ட 5 சத வீதம் அதிகரித்தது.

“அத்தனை விரைவாக தொற்று அதிகரிக்கும் போது நாம் அதனை புதிய அலை என்று கூறலாம்” என்கிறார் ஜெனிவா பல்கலைக் கழகத்தின் உலகளாவிய சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் Antoine Flahault.

அத்துடன் வைரஸ் எவ்வளவு வேகமாகப் பரவுகிறது என்பதைக் காட்டும் விகிதம் தொற்றுநோயியல் நிபுணர்கள் வைத்திருக்க விரும்பும் 1 க்கும் குறைவான அளவில் இருந்து தற்போது உள்ள 1.04 என்ற அளவுக்கு வந்துள்ளது. நோய்த் தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை அன்றாடம் அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது.

அப்படியானால் அது ஏன் முன்னைய இரண்டு அலைகலைப் போல் மோசமாக இல்லை?

இம்முறை விடயங்கள் வேறு விதமாக உள்ளன. முதலாம் மற்றும் இரண்டாம் அலைகளின் போது தொற்று மிக அதிக அளவில் இருந்தது. ஆனால் இம்முறை மூன்றாவது அலையின்போது தொற்று ஏற்படும் வேகம் குறைவாக உள்ளது.

அதே நேரம் மரணங்களின் எண்ணிக்கை முன்னரைப் போலன்றி இப்போது கிரமமாக குறைந்து வருகின்றது. அத்துடன் சுவிஸ் வைத்தியசாலைகளில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுகள் இப்போது நிரம்பியிருக்கவில்லை.

“எங்கள் நாட்டில் இப்போது சுகாதார நிலை ஓரளவு ஸ்திரமாக உள்ளது” என்று சுவிஸ் ஜனாதிபதி Guy Parmelin கடந்த வாரம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. “நம்பிக்கைக்கு நல்ல காரணங்கள் உள்ளன” என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்.

“தொற்று நோயியல் நிலைமை தற்போது உறுதியளிக்கும் வகையில் உள்ளது” என்று மத்திய பொதுச் சுகாதார அலுவலகத்தின் நோய்க் கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைமை அதிகாரி ஏசைபinநை ஆயளளநசநல குறிப்பிடுகிறார்.

நிலைமை ஏன் மேம்பட்டுள்ளது?

நிலைமை மாற்றத்தில் தடுப்பூசி பிரதான பங்கு வகிப்பதாக மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர்.

சுவிஸ் மக்கள் தொகையில் 10 சத வீதத்துக்கு மேற்பட்டவர்கள் இதுவரை இரண்டு வேளை தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர்.

கூட்டமாக நோய் எதிர்ப்பு சக்கியைப் பெற இது போதாது. அதனை எட்ட குறைந்த பட்சம் 60 சத வீதத்தினராவது தடுப்பூயை பெறவேண்டும். எனினும் முதலில் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட முதியோர் நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளதற்கான சாதக நிலையை ஏற்கனவே காட்டத் தொடங்கியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் தடுப்பூசி பிரசாரம் விரைவு படுத்தப்பட்டு வரும் நிலையில் பல மாகாண ஆட்சிகள் இளம் வயதினருக்கும் தடுப்பூசி வழங்குவதை ஆரம்பித்துள்ளன. இதனால் நோய்த் தொற்று மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வாசிக்க சுவிட்சர்லாந்தின் இரண்டு புதிய, பாரிய அளவிலான கொவிட் 19 தடுப்பூசி கேந்திரங்களுக்குள் தடுப்பூசி வழங்குவதற்கு புறம்பாக, மார்ச் நடுப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட பரவலான சோதனை நடவடிக்கைகளும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உதவியதாக Masserey கூறுகிறார்.

நாம் அபாய கட்டத்தில் இருந்து தப்பி விட்டோமா அல்லது மேலும் அக்கறை காட்டவேண்டிய தேவை உள்ளதா?

அது பற்றி எவருக்கும் சரியாகத் தெரியவில்லை

கொவிட் 19 க்கு எதிரான நடவடிக்கைகள் சிலவற்றை கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தியதையடுத்து சுவிட்சர்லாந்தில் நாளாந்தம் 10 ஆயிரம் நோயாளர்கள் காணப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக சில வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

“நோய்த்தொற்று ஓரளவு குறைந்துள்ள நிலையில் சுவிட்சர்லாந்து ஆபத்து நிலையை கையில் எடுத்துள்ளது” என்று சுவிட்சர்லாந்தின் கொவிட்19 செயலணிப்படையின் தலைவர் Martin Ackermann கூறுகிறார்.

எவ்வாறெனினும் சுவிட்சர்லாந்து அதன் தடுப்பூசி பிரசாரத்தை குறைத்தால்தான் இவ்வாறான மோசமான நிலை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

“நாம் போதுமான அளவு தடுப்புசிகளை வழங்காவிட்டால் வைரஸ் தொடர்ந்து பரவக்கூடும். இவ்வாறான பரவல் அதிகரித்தால் புதிய திரிபுடன் கூடிய வைரஸ் பரவும் ஆபத்தும் அதிகரிக்கும்” என்று ஏயரன பல்கலைக்கழக வைத்தியசாலையின் தொற்று நோய்களுக்கான பிரிவின் தலைவர் Blaise Genton கூறுகிறார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

சுவிட்சர்லாந்தில் மூன்றாவது கொவிட் 19 அலை ஏன் முன்னைய கொவிட்19 அலைகளைப் போல் மோசமாக இருக்கவில்லை?

“எங்கள் நாட்டில் இப்போது சுகாதார நிலை ஓரளவு ஸ்திரமாக உள்ளது” “நம்பிக்கைக்கு நல்ல காரணங்கள் உள்ளன” என்று சுவிஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் மூன்றாவது கொவிட் 19 அலை ஏன் முன்னைய கொவிட்19 அலைகளைப் போல் மோசமாக இருக்கவில்லை?

Search here