Search

Menu

Keeping you Informed News and Views..

தமிழகத்தில் ஆட்சியமைக்கத் தயாராகி வரும் திமுக

முதல்வராக பதவியேற்கத் தயாராகி வரும் மு.க.ஸ்டாலின், சட்டப் பேரவைக் குழுவைக் கூட்டி, தலைவர்களைத் தெரிவுசெய்வது தொடர்பாக ஆராய்ந்து வருகிறார்.

தமிழகத்தில் ஆட்சியமைக்கத் தயாராகி வரும் திமுக

தமிழகத்தின் புதிய முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்கத் தயாராகி வருகிறார். அவரது தலைமையிலான அரசு, 155இற்கும் அதிகமான பலத்துடன் ஆட்சியமைக்கவிருக்கிறது என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், தமிழகத்தின் புதிய முதல்வராகவிருக்கும் மு.க. ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்துக்கு இன்று காலை சென்றுள்ளார்.

இதையொட்டி தேர்தல் வெற்றிக்காக கோபாலபுரத்தில் உள்ள தாயாரின் வீட்டுக்குச் சென்று அவரிடம் ஸ்டாலின் ஆசி பெற்றார்.

பின்னர் அங்கிருந்து அண்ணா அறிவாலயம் சென்று, திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் ஸ்டாலின், திமுக சட்டப் பேரவைக் குழுவைக் கூட்டி, அதன் தலைவரைத் தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தவிருப்பதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், திமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் நாளை செவ்வாய் மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

 

திமுக எத்தனை இடங்களைக் கைப்பற்றியுள்ளது?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வென்றுள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளின் விவரம் இன்று பகல் 12 மணிக்குள் முழுமையாக அறிவிக்கப்படவுள்ளன. உள்ளுர் நேரத்தில் காலை 9.30 மணி நிலவரப்படி திமுக 122 இடங்களில் வென்றுள்ளதாகவும் 11 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் வென்றுள்ளது, இரண்டு இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இரண்டு இடதுசாரி கட்சிகளும் தலா இரண்டுகளில் வென்றுள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சி நான்கு இடங்களில் வென்றுள்ளது. இதன் மூலம் திமுக கூட்டணி 147 இடங்களில் வென்றுள்ளது. 12 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

மறுபுறம் அதிமுக கூட்டணியில் அதிமுக 64 இடங்களில் வென்றுள்ளது. இரண்டு இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதன் கூட்டணியில் உள்ள பாஜக மூன்று இடங்களில் வென்றுள்ளது, ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது. பாமக ஐந்து இடங்களில் வென்றுள்ளது. இதன்படி அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 72 இடங்களில் வென்றுள்ளது. 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், திமுக ஆட்சி அமைப்பது உறுதியானதையடுத்து, அதன் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோதி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே உள்பட பல்வேறு கட்சிகளின் தலைர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலையில் தமது தேர்தல் வெற்றி தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டதையடுத்து, கொளத்தூரில் உள்ள தேர்தல் அலுவலரிடம் சென்று தனது வெற்றிச்சான்றிதழை மு.க. ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

தமிழகத்தில் ஆட்சியமைக்கத் தயாராகி வரும் திமுக

முதல்வராக பதவியேற்கத் தயாராகி வரும் மு.க.ஸ்டாலின், சட்டப் பேரவைக் குழுவைக் கூட்டி, தலைவர்களைத் தெரிவுசெய்வது தொடர்பாக ஆராய்ந்து வருகிறார்.

தமிழகத்தில் ஆட்சியமைக்கத் தயாராகி வரும் திமுக

Search here