Search

Menu

Keeping you Informed News and Views..

மூன்றாம் சக்தியாக உருவெடுத்த சீமான் ! கமல் ஹாசனுக்கு என்ன நடந்தது?

234 தொகுதிகளில் தனித்து களம் கண்ட நாம் தமிழர் கட்சி 178 தொகுதிகளில் மூன்றாவது சக்தியாக உருவெடுத்துள்ளது.

மூன்றாம் சக்தியாக உருவெடுத்த சீமான் ! கமல் ஹாசனுக்கு என்ன நடந்தது?

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் போட்டியிட்டார். எனினும், அவரும் தோல்வியடைந்தார்.

இந்த போதிலும், 178 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைக்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சியாக அதிமுக அமரவிருக்கிறது.

இந்தநிலையில், மூன்றாவது இடத்தை எந்தக் கட்சி பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு தேர்தலுக்கு முன்பே அனைவர் மத்தியிலும் இருந்துவந்தது.

இந்தத் தேர்தலில் ஐந்து முனைப் போட்டி நிலவியதால் 3ஆவது இடத்தை அ.ம.மு.க. கூட்டணி பிடிக்குமா அல்லது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி பிடிக்குமா என்று பரவலாக விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், 234 தொகுதிகளிலும் தனித்து களம் கண்ட நாம் தமிழர் கட்சி 178 தொகுதிகளில் மூன்றாவது சக்தியாக வலுப்பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது.

50 வீதம் பெண்களுக்கு இட ஒதுக்கு

இந்த முறை 234 தொகுதிகளில் 117 தொகுதிகளில் ஆண்கள், 117 தொகுதிகளில் பெண்கள் என நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களைக் களமிறக்கியது.

கடந்து வந்த பாதை

2016ஆம் ஆண்டு வெறும் 1.5 சதவீதமாக இருந்த நாம் தமிழர் கட்சியின் வாக்குச் சதவீதம் அடுத்த 3 ஆண்டுகளில் 5.58 சதவீதமாக உயர்ந்தது. 4 நாடாளுமன்றத் தொகுதிகளில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை விட அதிக எண்ணிக்கையிலான வாக்குகளை பெற்றது.

2021 என்ற ஐந்து வருடங்களில் தமிழகத்தின் மூன்றாவது சக்தியாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி பலம் பெற்றுள்ளது.

கமல்ஹாசனுக்கு என்ன நடந்தது?

கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் களம் கண்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனிடம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தோல்வியடைந்தார்.

மொத்தம் நடந்த 26 சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில், வானதி சீனிவாசன் 1,728 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அந்த தொகுதியில் மொத்தம் பதிவான 1,54,765 வாக்குகள், 26 சுற்றுகளாக எண்ணப்பட்டன.

இதன் முடிவில் 53,209 வாக்குகளுடன் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் முதலிடம் பிடித்தார். 51,481 வாக்குகளைப் பெற்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் இரண்டாம் இடத்தில் இருந்தார். 42,383 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் மூன்றாம் இடத்தில் இருந்தார்.

இந்த முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், தேர்தல் அலுவலர்கள் மூலம் கிடைத்த தகவலைத் தொடர்ந்து தமது ட்விட்டர் பக்கத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் வானதி ஸ்ரீனிவாசன்.

முன்னதாக, இந்த தொகுதியில் காலையில் இருந்து பிற்பகல் வரை வாக்குகள் எண்ணப்பட்டபோது, வானதி, காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயகுமார் ஆகியோரை விட ஆயிரம் வாக்குகளுக்கும் மேல் என்ற அளவில் கமல்ஹாசன் முன்னிலை வகித்தார். இதனால் புன்னகையுடனேயே அவர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் காணப்பட்டார்.

ஆனால், மாலை 5 மணிக்கு பிறகு 22ஆவது சுற்று எண்ணத்தொடங்கியபோது, கமலையும், மயூரா ஜெயகுமாரையும் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு வானதி முன்னேறினார். 25, 26 என கடைசி சுற்று நெருங்கியபோது இரண்டாமிடத்தில் இருந்த கமலை விட அதிக வாக்குகளை வானதி பெற்றதைத் தொடர்ந்து அவரது வெற்றி உறுதியானது.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைமுறையை முதல் முறையாக பார்க்கும் கமல், ஒரு வேட்பாளராக அந்த அரங்கின் முகவர், வேட்பாளர்கள் அமர ஒதுக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்தவாறு வாக்குகள் அறிவிக்கப்படும் தகவலை ஒரு நோட்புக்கில் குறிப்பெடுத்துக் கொண்டே இருந்தார். கடைசி இரு சுற்றுகளின்போது எந்த உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாதவராக காணப்பட்ட கமல், தமது கடைசி சுற்று தகவலையும் குறிப்பெடுத்துக் கொண்டு அங்கிருந்து விடைபெற்றார்.

வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாள் முன்னதாக அறிக்கை வெளியிட்ட கமல்ஹாசன், முடிவுகள் எப்படி வந்தாலும் தொடர்ந்து மக்களுக்காக உழைப்போம் என்று கூறியிருந்தார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

மூன்றாம் சக்தியாக உருவெடுத்த சீமான் ! கமல் ஹாசனுக்கு என்ன நடந்தது?

234 தொகுதிகளில் தனித்து களம் கண்ட நாம் தமிழர் கட்சி 178 தொகுதிகளில் மூன்றாவது சக்தியாக உருவெடுத்துள்ளது.

மூன்றாம் சக்தியாக உருவெடுத்த சீமான் ! கமல் ஹாசனுக்கு என்ன நடந்தது?

Search here