Search

Menu

Keeping you Informed News and Views..

பெரும்பாலான சுவிஸ் ஏரிகள், ஆறுகளில் நீர் மட்டம் குறைகிறது

ஆறுகள் ஏரிகள் இயல்பு நிலைக்கு வர பல நாட்கள் ஆகலாம் என்றாலும் வெள்ள அச்சம் நீங்கிவிட்டது.

பெரும்பாலான சுவிஸ் ஏரிகள், ஆறுகளில் நீர் மட்டம் குறைகிறது

சுவிஸின் பல ஏரிகள், ஆறுகளில் நீர்மட்டம் ஆபத்தான நிலைக்கு உயர்ந்து கரைகளை வெடித்தபோதும், ஞாயிறு முதல் சுவிட்சர்லாந்து முழுவதும் நீர்மட்டம் குறைய ஆரம்பித்தது. ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகளில் பெருமழை வெள்ளத்தால் 180 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டபோதும், சுவிட்சர்லாந்து வானிலை சீர்கேடு தொடர்பான உயிரிழப்புகளை சந்திக்கவில்லை.

சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் நிலைமை சீரடைந்துவரும் போதிலும் இன்னும் ஆபத்து நீங்கவில்லை என்று கருதப்படுகிறது. லூசர்ன் ஏரி, துன் ஏரி, பீல் ஏரிகள் இன்னும் மிக உயர்ந்த ஆபத்து நிலையான 5 இல் உள்ளன, இருப்பினும் மூன்றிலும் நீர்மட்டம் குறைந்து வருகின்றது. ஆரே நதியும் வழைமைக்குத் திரும்புகிறது.

சுவிட்சர்லாந்து முழுவதும் வானிலை பெரும்பாலும் வறண்டதாக இருக்கும் என்றும், வரும் வாரத்தில் கோடை வெப்பத்தை உணரலாம் என்றும் வானிலை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆறுகள் ஏரிகள் இயல்பு நிலைக்கு வர பல நாட்கள் ஆகலாம் என்றாலும் வெள்ள அச்சம் நீங்கிவிட்டது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here