Search

Menu

Keeping you Informed News and Views..

வெளிநாடுகளிலுள்ள சுவிஸ் பிரஜைகளுக்கு கொவிட் தடுப்பூசி கிடைப்பதில்லை

சுவிட்சர்லாந்து அரசாங்கம் அதன் தடுப்பூசி பிரச்சாரத்தில் நாட்டில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளிலுள்ள சுவிஸ் பிரஜைகளுக்கு கொவிட் தடுப்பூசி கிடைப்பதில்லை

பல்லாயிரக்கணக்கான சுவிஸ் பிரஜைகள் தடுப்பூசி போட முடியாத நாடுகளில் வாழ்வதாக SRF அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலுள்ள சுவிஸ் குடிமக்கள் கொவிட் -19 தடுப்பூசிகளைப் பெறுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று Swiss Abroad (OSA) அமைப்பின் தலைவர் கோரியுள்ளார்.

வெளிநாடுகளில் வசிக்கும் குறைந்தது 78,000 சுவிஸ் பிரஜைகள் தாம் வசிக்கும் நாட்டில் கொவிட் -19 தடுப்பூசிகளைப் பெற முடியாமல் உள்ளதாக SRF நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து அரசாங்கம் அதன் தடுப்பூசி பிரச்சாரத்தில் நாட்டில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்துள்ளது.

இது வெளிநாடுகளில் வாழும் பல சுவிஸ் குடிமக்களை கடினமான சூழ்நிலையில் தள்ளியுள்ளது. உதாரணமாக, தாய்லாந்தில், அந்நாட்டு பிரஜை அல்லாதவர்கள் தடுப்பூசிகளுக்கு தகுதிபெற்றவர் அல்ல. கொவிட் தொற்று அதிகரித்த போதிலும், ஆசிய நாடுகளில் வாழும் சுவிஸ் குடிமக்களுக்கு தடுப்பூசி போட வாய்ப்பில்லை என்று SRF தெரிவித்துள்ளது.

தாய்லாந்தில் வசிக்கும் பிரெஞ்சு குடிமக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்பை பிரான்ஸ் வழங்கியுள்ள நிலையில், சுவிட்சர்லாந்தில் அதைப்போன்ற திட்டம் தற்போது இல்லை.

OSA தலைவர் Remo Gysin, சுவிட்சர்லாந்தில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சுவிஸ் அரசாங்கத்தின் முடிவு, வெளிநாடுகளிலுள்ள சுவிஸ் மக்களின் சமத்துவத்திற்கான உரிமைகளை மீறுவதாகும் என்று கூறினார்.

தடுப்பூசி கொள்முதல் ஒப்பந்தங்களின் தன்மை காரணமாக, சுவிஸ் அரசாங்கத்தால் வாங்கப்பட்ட கொவிட் தடுப்பூசிகளை தற்போது வெளிநாடுகளில் நிர்வகிக்க முடியாது என்று சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் SRF இற்குத் தெரிவித்துள்ளது.

பொது சுகாதாரத்திற்கான மத்திய அலுவலகம், தடுப்பூசி தயாரிப்பாளர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும் இந்த சிக்கலை சரிசெய்ய முயற்சிப்பதாகவும் SRF தெரிவித்துள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here