Search

Menu

Keeping you Informed News and Views..

தி.மு.க. தொடர்ந்து முன்னணியில் : தலைவர்கள் ஸ்டாலினுக்கு வாழ்த்து

திமுக வரலாற்றில் புதிய அத்தியாயம்: முழுக்கவனத்திற்கு ஸ்டாலின் அழைப்பு

தி.மு.க. தொடர்ந்து முன்னணியில் : தலைவர்கள் ஸ்டாலினுக்கு வாழ்த்து

இறுதிப் பதிப்பு

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தி.மு.க. பெரும்பான்மையான இடங்களில் முன்னணி வகித்து வருகிறது.

இறுதி முடிவுகள் இன்னமும் முழுமையாக வெளிவாரத நிலையில் கூட, தி.மு.க. ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.

இந்தந நிலையில், தி.மு.க.வின் முதலாவராக மு.க. ஸ்டாலின் பதவியேற்கத் தயாராகி வருகிறார். இவருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

”தி.மு.க.வை ஆறாவது முறையாக ஆட்சியை செலுத்த கட்டளையிட்ட மக்களுக்கு செஞ்சார்ந்த நன்றி” என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் பதிப்பு

இதுவரை வெளிவந்துள்ள முடிவுகளின்படி தி.மு.க. 123 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அ.தி.மு.க. 77 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனைத் தவிர காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும், பாட்டாளி மக்கள் கட்சி 6 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. அத்துடன், பா.ஜ.க. மூன்று இடங்களிலும் கமல் ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி ஒரேயொரு இடத்திலும் முன்னிலையிலும் உள்ளன.

நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளில் போட்டியிட்ட போதிலும் எந்தவொரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை. இதில் 117 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதேவேளை, திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான் வெற்றிபெறுவார் என்று அவரது ஆதரவாளர்கள் பெருமளவில் எதிர்பார்த்த போதிலும் அவரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

இரண்டாம் பதிப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 முடிவுகள்: தி.மு.க. 137 இடங்கள் பெற்று முன்னணியில்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காலை பதினோரு மணி அளவில் நடைபெற்று நிறைவடைந்த இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தி.மு.க கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

முதல் பதிப்பு

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி அளவில் தமிழகத்தில் தொடங்கியது.

முதலில் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டன .இதனைத் தொடர்ந்து மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்து பகல் 2.15 மணி வரை எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தி.மு.க கூட்டணி 143 இடங்களிலும் அ.தி.மு.க கூட்டணி  90 இடங்களிலும் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மையம் கூட்டணி ஓரிடத்திலும் முன்னிலை வகிக்கிறது.

கன்னியாகுமரி மக்களவைக்கான மக்களவை இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட விஜய் வசந்த் முன்னிலை வகிக்கிறார்.
முன்னாள் அமைச்சர்களான மாஃபா பாண்டியராஜன், ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பின்னடைவை சந்தித்திருக்கிறார்கள்.

மாலை 4 மணி அல்லது 6 மணி அளவில் கட்சிகளின் வாக்கு எண்ணிக்கைகளின் அடிப்படையில் உறுதியான முன்னிலை நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுவையில் வாக்கு எண்ணும் பணிகள்

 

கருணாநிதி, ஜெயலலிதா என்ற பெருந்தலைகள் இல்லாத தமிழகத்தின் முதல் தேர்தல்

தமிழகத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் மறைந்த பின்னர் நடைபெற்ற முதல் சட்டப் பேரவைத் தேர்தல் இதுவாகும்.

இது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016 டிசம்பரில் மறைந்த பின்னர் பின்னர் சில மாதமங்கள் ஓ.பன்னீர்ச் செல்வம் முதர்வர் பொறுப்பில் இருந்தார்.

அதன்பின்னர் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டு எடப்பாடி பழனிச்சாமி 2017ஆம் ஆண்டு பெப்ரிவரி மாதம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

2011 மற்றும் 2016 என இரண்டு முறை ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை அதிமுக தலைமையிலான அரசு நிறைவு செய்துள்ளது.

தற்போது மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சியை தொடருவதை நோக்காகக் கொண்டு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்ச்செல்வம் தலைமையிலான அதிமுக தேர்தலை எதிர்கொண்டுள்ளது.

திமுகவைப் பொறுத்தவரை, அதன் தலைவர் மு.கருணாநிதி மறைவுக்குப் பின்னர் மு.க. ஸ்டாலின் தனது தலைமையில் முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டுள்ளார்.

தி.மு.க. தொண்டர்கள் மே 2, 2021 அன்று சென்னை அண்ணா அரியாதயத்தில் வெற்றியை கொண்டாடுகிறார்கள்

தேர்தலின் பின்னர் வெளிவந்துள்ள ஆய்வுகளின்படி தி.முக. இந்தத் தேர்தலல் அதிக இடங்களைப் பிடிக்கும் என்று கூறப்பட்டமையும் இங்கு கவனிக்கத்தக்கது.

 

குஷ்பு, சீமான் உள்ளிட்ட பிரபலங்கள் தேரிதலில் பின்னடைவு

தமிழக தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட திரைப்பட நடிகை குஷ்பூ பின்னடைவை சந்தித்திருக்கிறார்.

தமிழக தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் திரைப்பட நடிகை குஷ்பூ போட்டியிட்டார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க.வை சேர்ந்த மருத்துவர் எழிலன் 8,261 வாக்குகளும், நடிகை குஷ்புவிற்கு 3,908 வாக்குகளும் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் நான்காயிரத்திற்கும்  அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் நடிகை குஷ்பு பின்னடைவை சந்தித்து வருகிறார்.

சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ஜெயக்குமார், தி.மு.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ட்ரீம்ஸ் மூர்த்தியை விட 900 வாக்குகள் குறைவாகப் பெற்று பின்னடைவை சந்தித்து வருகிறார்.

கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளரான மு.க.ஸ்டாலின் 12,664 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க மாவட்ட செயலாளரான ஆதிராஜாராம் 5,012 வாக்குகள் பெற்று பின்தங்கி இருக்கிறார்.

சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.வை சேர்ந்த உதயநிதி ஸ்டாலின் 17, 955 வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ம.க.வை சேர்ந்த கசாலி 4,075 வாக்குகள் பெற்று பின்தங்கி இருக்கிறார்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவரான கமல்ஹாசன் 7,074 வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜெயக்குமா

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

தி.மு.க. தொடர்ந்து முன்னணியில் : தலைவர்கள் ஸ்டாலினுக்கு வாழ்த்து

திமுக வரலாற்றில் புதிய அத்தியாயம்: முழுக்கவனத்திற்கு ஸ்டாலின் அழைப்பு

தி.மு.க. தொடர்ந்து முன்னணியில் : தலைவர்கள் ஸ்டாலினுக்கு வாழ்த்து

Search here